வேளாண் பல்கலைக்கழகத்தின் களை அறிவியல் மையத்திற்கு தேசிய விருது

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பிரதான ஆராய்ச்சி நிலையமான களை ஆராய்ச்சி இயக்குனரகம், ஜபல்பூரின் கீழ் இயங்கும் அனைத்திந்திய ஒருங்கிணைக்கப்பட்ட களை மேலாண்மை ஆராய்ச்சி திட்டத்தில் இணைந்துள்ள மையங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கோவை மையத்திற்கு இவ்வாண்டின் சிறந்த மையத்திற்கான 2016- 17 விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.



இவ்விருதானது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் அமைந்துள்ள மகாராணா பிரதாப் வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 24-வது ஆண்டு கூட்டத்தில் வழங்கப்பட்டது.

இம்மையத்திற்கான இவ்விருதினை போராசிரியர் (உழவியல்) மற்றும் முதன்மை ஆராய்ச்சியாளர் முனைவர் சி.சின்னுசாமி மற்றும் உதவிப் பேராசிரியர் (உழவியல்) முனைவர். ப.முரளி அர்த்தனாரி ஆகியோருக்கு ஜபல்பூர் களை ஆராய்ச்சி இயக்குநரக உதவி பொது இயக்குநர் முனைவர் ச.பாஸ்கரன் மற்றும் இயக்குனர் முனைவர் ஏ.ஆர்.சர்மா ஆகியோர் முன்னிலையில் விவசாய மற்றும் தொழில்நுட்ப மஹாரணா பிரதாப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் உமாசங்கர் சர்மா-வால் வழங்கப்பட்டது.

இவ்விருதில், கேடயம், சான்றிதழ் மற்றும் ரூபாய் ஒரு லட்சம் கூடுதல் ஆராய்ச்சிக்கான நிதி ஆகியனவற்றை முனைவர். சி.சின்னுசாமி, முனைவர். ப.முரளி அர்த்தனாரி, முனைவர். பொ.ஜானகி மற்றும் முனைவர். அ.இராமலட்சுமி ஆகியோரின் மகத்தான களை அறிவியல் சம்பந்தமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும், இம்மையமானது, நெல், சோயாமொச்சை, கரும்பு, நிலக்கடலை, வெங்காயம், சர்க்கரைவள்ளி, புகையிலை, மக்காச்சோளம் மற்றும் நீர் நிலைக் களைகளுக்கு ஒருங்கிணைந்த களை தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது.

மேலும், மண், நீர் மற்றும் உணவுச்சங்கிலியில் உள்ள களைக்கொல்லிகளின் எஞ்சிய நச்சு மற்றும் வேளாண்மை பயிர் உற்பத்தியில் களை மேலாண்மை தொழில்நுட்பத்தின் தாக்கம் போன்றவற்றை உருவாக்கியுள்ளது. மிகச் சிறந்த மற்றும் வெற்றிகரமான தொழில்நுட்பங்களை முதன்மை விளக்கதிடல் மற்றும் பண்ணைகளில் செயல்விளக்கத்தின் மூலம் வேளாண் பெருமக்களுக்கு சென்றடையச் செய்கிறது.

இம்மையமானது 30-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாது தேசிய மற்றும் பன்னாட்டு கருத்தரங்குகளில் பங்கு பெற்று பலவிதமான விருதுகளை பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளது. கடந்து ஐந்து வருடங்களில் இம்மையமானது 61-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளையும், ஆறு பொதுக் கட்டுரைகளையும், 21 புத்தக அத்தியாயங்களையும் மற்றும் ஐந்து புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது.

மேலும், 95 ஆராய்ச்சி கட்டுரைகளை பலவிதமான அறிவியல் மாநாடுகள், கருத்தரங்குகளில் சமர்பித்துள்ளது. மேலும், இம்மையமானது பொது மற்றும் தனியார் நிறுவனங்களுடன் உடன்பாடு செய்துகொண்டு ரூபாய் 1.75 கோடிக்கும் அதிகமான ஆராய்ச்சிக்கான முதலீடுகளை பெற்று சிறந்த முறை களை மேலாண்மை தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது.

மேற்கண்ட களை ஆராய்ச்சி தொழில்நுட்பம் சம்பந்தமான கண்டுபிடிப்புகளுக்கும் பங்களிப்புக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக களை அறிவியல் மையமானது 2016-17 ஆம் ஆண்டிற்கான சிறந்த மையத்திற்கான விருதினை மற்ற 24 அனைத்திந்திய ஒருங்கிணைக்கப்பட்ட களை மேலாண்மை ஆராய்ச்சி மையங்களில் சிறந்த மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...