வால்பாறை அரசு மருத்துவமனையில் சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆய்வு!

வால்பாறை அரசு மருத்துவமனையில் இன்று வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அமுல் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போதிய மருத்துவர்கள் இல்லை என வைக்கப்பட்ட கோரிக்கையை முதலமைச்சரிடம் கொண்டு சென்று நிறைவேற்ற வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார்.



கோவை: வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.

வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதாக பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மருத்துவர்கள் வேலை நேரங்களில் மருத்துவமனையில் உள்ளார்களா என்று ஆய்வு மேற்கொண்ட அவர், நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும் வால்பாறையில் சிகிச்சைக்கு வரும் மக்களை பொள்ளாச்சி பகுதிக்கு அனுப்ப வேண்டாம்.



வால்பாறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



அப்போது வால்பாறை அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் மருத்துவமனை பணியாளர்கள் தேவை என்றும் மருத்துவர் மகேஷ் ஆனந்தி சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சரிடம் இது சம்பந்தமாக புகார் தெரிவித்து வால்பாறை மருத்துவமனைக்கு அதிகப்படியான மருத்துவர்களையும் பணியாளர்களையும் நியமிக்க வலியுறுத்துவதாக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

இந்த ஆய்வின் போது நகர செயலாளர் மயில், பொன்.கணேசன், சுடர் பாலு, ஆடிட்டர் சண்முகவேல், எஸ்.கே.எஸ் பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...