பாஜக அரசை கண்டித்து தாராபுரத்தில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தாராபுரத்தில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் சத்யா பழனிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: தாராபுரத்தில், திமுக மகளிர் அணி சார்பில், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், திமுக மகளிர் அணி சார்பில், மணிப்பூரில் மகளிருக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த முடியாத மோடி தலைமையிலான, ஒன்றிய பாசிச பாஜக அரசையும், மணிப்பூரில் ஆட்சி செய்யும் பாஜக அரசையும் கண்டித்து, தாராபுரம் அண்ணா சிலை முன்பு தி.மு.க. மகளிர் அணி சார்பில், மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் சத்யா பழனிக்குமார் தலைமையில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூரில் ஆட்சி செய்யும் பாஜக அரசை கட்டுப்படுத்த தவறிய மோடி தலைமையிலான மத்திய பாசிச பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி, பாஜக அரசின் மீது உள்ள தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



இந்நிகழ்சியில், திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட மகளிர் அணி தலைவருமான சரஸ்வதி ராஜேந்திரன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், காங்கயம், தாராபுரம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திமுக மகளிர் அணி சார்பில், சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...