கோவையில் பைக்கை திருடிவிட்டு சிசிடிவிக்கு டாட்டா காட்டிவிட்டு சென்ற கொள்ளையர்கள் - போலீஸ் வலைவீச்சு!

கோவை பெரிய கடை வீதியை சேர்ந்த ஐடி ஊழியர் சுரேஷ் தனது வீட்டில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள், அங்கிருந்த சிசிடிவி கேமராவுக்கு டாட்டா காட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



கோவை: கோவையில் விலை உயர்ந்த பைக்கை திருடிவிட்டு சிசிடிவி கேமராவுக்கு டாட்டா காட்டி விட்டு சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை பெரிய கடை வீதியை சேர்ந்த ஐடி ஊழியரான சுரேஷ் சமீபத்தில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 22ஆம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு தனது வீட்டில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

இரவு உறங்கிவிட்டு பின் மறுநாள் காலை சென்று பார்த்தபோது அவரது பைக் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ், பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.



அப்போது நள்ளிரவில் அவ்வழியாக பைக்கில் வந்த இரண்டு கொள்ளையர்கள் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது.



மேலும் வாகனத்தை திருடி செல்வதற்கு முன் சிசிடிவி கேமராவை பார்த்து டாட்டா காட்டியுள்ளனர்.



இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் கொள்ளையர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...