மூலனூர் அருகேயுள்ள நடைபாதையை மீட்டுத்தரக்கோரி தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசிக சார்பில் மனு!

தாராபுரத்தை அடுத்த மூலனூர் பகுதியில் நடைபாதையை மீட்டு தரவும், பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதியில் நடைபாதையை மீட்டு தர வலியுறுத்தி, வட்டாட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சாணார் பாளையம் ஏசு வீதியில், பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை முத்துவேல் என்பவர், ஹாலோ பிளாக் கல்லால் காம்பவுண்ட் சுவர் எழுப்பி வலியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த பாதையை முத்துவேல் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு அடியாட்களை வைத்து பொதுமக்களை மிரட்டி வருவதாகவும், பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் மூலனூர் சாணார் பாளையம், ஏசு வீதி ஆகிய பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா இல்லாத காரணத்தினால் அடிப்படை வசதிகள் எதுவும் பெற முடியாத சூழலில் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.



எனவே உடனடியாக தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள பொது வழித்தடத்தை மீட்க வேண்டும் என்றும், அரசுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...