கோவையில் பைக் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் விபத்தில் பலி - இருவரும் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பியவர்கள்!

கோவை பஜார் வீதியில் கடந்த 22ஆம் தேதி நள்ளிரவில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்த வாகனம் பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் விபத்தில் சிக்கியதில், 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். விசாரணையில் இருவரும் செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பிச் சென்றவர்கள் என தெரியவந்துள்ளது.


கோவை: கோவையில் இருசக்கர வாகனத்தை திருடி, செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் துணிகர கொள்ளை சம்பவங்கள் பல்வேறு கொள்ளை கும்பலால் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கோவை பஜார் பகுதியில் ஒரு விலை உயர்ந்த ட்யூக் வாகனத்தை இரவில் ஒரு கொள்ளை கும்பல், திருட்டு பைக்கில் வந்து லாவகமாக கொள்ளையடித்து சென்றனர்.



மேலும் அவர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவுக்கு டாட்டா காட்டிவிட்டு சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.



இந்த நிலையில் பொள்ளாச்சியில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் கொண்ட பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் ஒரு பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடினர். அந்த கொள்ளையர்கள் பயன்படுத்திய பைக்கானது, கோவையில் லாவகமாக திருடப்பட்ட டியூக் பைக் என தெரியவந்தது.

எனவே இரவில் பைக் திருட்டு, பகலில் திருடிய பைக்கில் பயணித்து வழிப்பறியில் ஈடுபடுகின்றனரா என்ற கேள்வி எழுந்தது. இந்த கொள்ளை கும்பலை பிடிக்க பொதுமக்கள் போலிசாரை வலியுறுத்தினர். வழிப்பறி கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.



இந்நிலையில் நேற்று நள்ளிரவு பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் இருசக்கர வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்திற்குள்ளான இருசக்கர வாகனமானது, பசார் வீதியில் திருடப்பட்ட இருசக்கர வாகனம் என தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இறந்த 2 இளைஞர்களும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பி வந்தவர்கள் என தெரியவந்தது. கடந்த 6ஆம் தேதி செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் இருந்து இளைஞர்கள் 5 பேர் தப்பினர்.

இந்த நிலையில் சஞ்சய் மற்றும் ஹரிமதன் ஆகிய இந்த 2 இளைஞர்களும், இருசக்கர வாகனங்களை திருடிச்சென்று, செயின் பறிப்பிலும் ஈடுபட்ட நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்து தப்பிச்சென்ற மற்ற இரு நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...