கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது - 1.15 கிலோ கஞ்சா பறிமுதல்!

பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபுல்யூ பாலம் அருகே போலீசாரின் ரோந்து பணியின் போது, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம், விஷ்ணு சங்கர் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார். இந்த நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப் பகுதியில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பெரிய நாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பெயரில் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான காவலர்கள் பெரியநாயக்கன் பாளையம் எல்.எம்.டபுல்யூ பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், விஷ்ணு சங்கர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அவர்கள் அங்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...