ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் - விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

ரேஷன் கடைகளில் பாமாயிலை தடை செய்து தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும். கள்ளுக்கு உண்டான தடையை நீக்குவது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காயை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ரேஷன் கடைகளில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கிட வேண்டும். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தில் கள்ளுக்கு உண்டான தடையை நீக்க வேண்டும். தேங்காய் ஏற்றுமதியில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும்.

உரித்த பச்சை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 50 வீதம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 நிர்ணயம் செய்திட வேண்டும்.

தென்னை சார்ந்த உபபொருட்களான நார் தொழில், நார் துகள்கள் போன்ற மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தும் தொழிலுக்கான இடர்பாடுகாளை களைய வேண்டும்.



இவ்வாறான 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் ஏர் முனை இளைஞர் அணி மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட தென்னை விவசாயிகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் தேங்காயை சாலையில் உடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.



இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...