மணிப்பூர் கலவரம் - கோவையில் திராவிடத் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், மணிப்பூர் கலவரம் மற்றும் பாஜக அரசை கண்டித்து கோவையில் திராவிடத் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோவையில் திராவிடத் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினர் இடையே கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மணிப்பூரை சேர்ந்து இரு பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மணிப்பூரில் நிலவும் இந்த கலவரத்திற்கு பாஜக அரசு தான் காரணம் என கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிட தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் மீது தான வன்முறை கலவரக்காரர்களை கண்டித்தும், பெண்கள் மீதான வன்கொடுமையில் ஈடுப்பட்டவர்களை கைது செய்ய கோரியும், மணிப்பூர் பாஜக அரசை கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, மேற்கு மண்டல தலைவர் கார்த்திக் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...