மடத்துக்குளத்தில் நெருப்பில்லா சமையல் போட்டி - உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவர்கள்!

மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் போஷன் அபியான் திட்டத்தின் மூலம் நடைபெற்ற நெருப்பில்லா சமையல் போட்டியில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர்.


திருப்பூர்: மடத்துக்குளம் பகுதியில் நடைபெற்ற அடுப்பில்லா சமையல் போட்டியில் 60க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் போஷன் அபியான் திட்டத்தின் மூலமாக வளர் இளம்பருவத்தினர்கான நெருப்பில்லா சமையல் போட்டி மடத்துகுளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மடத்துக்குளம் வட்டாரத்தில் உள்ள 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் 60-க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை கொடுக்கப்பட்ட 25 நிமிடங்களில் செய்து காட்டினர்.

இந்நிகழ்வை மடத்துக்குளம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி.வேளாங்கண்ணி தலைமை தாங்கி நடத்தினார்.



எண்ணம்போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன் போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு மரக்கன்று மற்றும் எழுதுபொருட்கள் பெட்டகங்களை பரிசாக வழங்கினார்.



பள்ளி துணை தலைமையாசிரியர் ஜெயசந்திரன் சிறப்புரை வழங்கினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் கௌதமன் செய்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...