பல்லடத்தில் நகராட்சியில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

பல்லடம் நகராட்சியில் ரூ.4 கோடி மதிப்பிலான குப்பை அள்ளும் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அதனை ரத்து செய்ய கோரி, திமுக உள்ளிட்ட 11 நகராட்சி கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பல்லடம் நகராட்சியில் குப்பை அள்ளும் டெண்டரை ரத்து செய்யக்கோரி நகராட்சி கவுன்சிலர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி தலைவர் கவிதா மணி தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.



கமிஷனர் முத்துசாமி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நகராட்சி கவுன்சிலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது, நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை அள்ளுவதற்கான 4 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டு உள்ளது. எந்தவித தகவலும் தெரிவிக்காமல் டெண்டர் விடப்பட்டதால் இதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கவுன்சிலர்கள் முன் வைத்தனர்.



நகராட்சி தலைவர் இதை ஏற்காத நிலையில், டெண்டரை ரத்து செய்யாமல் தீர்மானத்தில் கையெழுத்திட மாட்டோம் என்று கூறி 11 வார்டு கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. இதுகுறித்து கூட்டத்தில் தெரிவித்தாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. சமீபத்தில் கொண்டுவரப்பட்ட டெண்டர் குறித்து கவுன்சிலர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

இந்த டென்டரில் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் உள்ளது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் நாங்கள் யாருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படவில்லை. இந்த டெண்டர் விவகாரத்தால் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என்பதற்காகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



முன்னதாக டெண்டரை ரத்து செய்ய கோரி கவுன்சிலர்கள் வலியுறுத்தியதால், நகராட்சி கூட்ட அரங்கில் இருந்து தலைவர் கவிதாமணி எழுந்து சென்றார்.



இதையடுத்து கவுன்சிலர்கள் 11 பேரும் கூட்ட அரங்கில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தலைவர் உத்தரவுப்படி கூட்டரங்கின் விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையிலும் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து டென்டரை ரத்து செய்ய பரிந்துரைப்பதாக நகராட்சி கமிஷனர் முத்துசாமி கவுன்சிலர்களிடம் தெரிவித்தார்.

பல்லடம் நகராட்சி திமுக வசம் உள்ளது. திமுகவினர் கொண்டு வந்த டென்டரை திமுகவினர் உட்பட மாற்று கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்த இச்சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...