கோவையில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் - அமைச்சர் சு.முத்துச்சாமி நேரில் ஆய்வு!

கோவை பீளமேடு - ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் பெறும் முகாமினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: கோவையில் நடைபெற்று வரும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப படிவம் பெறும் முகாமை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை பீளமேடு - ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்ப படிவம் பெறும் முகாமினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம் வழங்கு பணி துவங்கி இருக்கிறது. இந்த திட்டம் அநேகமாக இந்தியாவிலேயே சிறந்த திட்டமாக முதல்வர் அறிவித்துள்ளார். அந்த பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள 1401 ரேசன் கடைகளில் முதற்கட்டமாக 839 கடைகளில் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் 1679 தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். 53693 பேருக்கு ஆய்வு செய்து விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

ஆவாராம்பாளையம் பகுதியில் உள்ள ஆய்வு செய்து வரும் பகுதியில் 1088 குடும்ப அட்டைதாரர்களில் 141பேர் இதுவரை வந்திருக்கிறார்கள். 30ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் மீதம் உள்ளவர்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கும். கடைசி இரண்டு நாட்கள் விடுபட்டவர்கள் முழுமையாக வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் தாராபுரத்தை சேர்ந்தவர் உயிரிழந்த சம்பவத்தில் தவறு நடந்துள்ளதா என விசாரித்து வருகிறார்கள். அவ்வளவு மோசமான நிலைமையில் கோவை அரசு மருத்துவமனை இல்லை என்பது தான் உண்மை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...