உடுமலையில் சாதனை மாணவிகளுக்குப் பாராட்டு விழா!

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் அரசு விருந்தினராக பங்கேற்ற மாணவி உமா நந்தினி மற்றும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 2ஆம் இடம் பிடித்த வி.ப்ரீத்தி ஆகியோரை பாராட்டி, ரூ.10000 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தேசிய அளவில் சாதனை புரிந்த மாணவிகளை பாராட்டி, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தேசிய அளவில் சாதனை புரிந்த மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா கல்லூரியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.



டெல்லி புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் அரசு விருந்தினராக பங்கேற்ற மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம் பயிலும் மாணவி உமா நந்தினி, மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த வி.ப்ரீத்தி ஆகிய இருவருக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டு விருதுத் தொகை தலா ரூபாய் 10000 ஆயிரம் மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரின் செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ணப் பிரசாத் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கமாண்டிங் அதிகாரி ஜே.எம்.ஜோஷி, மேஜர் ஸ்ரீ பிரியா மற்றும் துணை மேஜர் நஸிப் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வர் முனைவர் ந. ராஜேஸ்வரி வரவேற்புரை வழங்கினார்.



ஆலோசகர் முனைவர் ஜெ. மஞ்சுளா அவர்கள் பாராட்டு உரை நிகழ்த்தினார். கல்லூரிப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், இயற்பியல் துறைத் தலைவருமான முனைவர் எஸ். அறம் நன்றியுரை வழங்கினார். கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரி கற்பகவல்லி உடன் இருந்தார்.

நிறைவாக தேசியப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. சாதனை மாணவிகளை கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் பாராட்டி தங்கள் மகிழ்வைத் தெரிவித்துக் கொண்டனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...