குடிமங்கலம் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு மையத்தில் ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு!

உடுமலை அடுத்த குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், அமைக்கப்பட்டுள்ள மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு மையத்தில் ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட எஸ்.பி சுவாமிநாதன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த குடிமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவு மையத்தில் ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் உடனிருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...