உடுமலையில் ஆசிய ஹாக்கி கோப்பை அறிமுகம் - அமைச்சர்கள் பங்கேற்பு!

உடுமலை அரசு ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற 7வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி கோப்பை மற்றும் லோகோ அறிமுக விழாவில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: உடுமலை அரசு ஆண்கள் பள்ளியில் 7வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி கோப்பை மற்றும் லோகோ அறிமுக விழா நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கல்பனா ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான நேதாஜி விளையாட்டு மைதானத்தில் ஏழாவது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி கோப்பை அறிமுக விழா மற்றும் ஏழாவது ஆசிய ஹாக்கி போட்டியின் லோகோ அறிமுகம் செய்யப்பட்டது.



பின்னர் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முன்னதாக அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளி மாணவர் மாணவர்களின் சீர்மிகு அணிவகுப்பு செய்து காண்பிக்கபட்டது.



இந்த நிகழ்வில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லட்சுமணன், திருப்பூர் மாநகராட்சி 4ஆம் மண்டல தலைவர் இலா.பத்மநாபன் மற்றும் திருப்பூர் மாவட்ட்ட விளையாட்டு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...