போலி ஆடியோ வெளியிட்டு வதந்தி பரப்புவதாக கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர் புகார்!

கட்சி தலைமை குறித்து அவதூறாக பேசுவதாக போலி ஆடியோவை வெளியிட்டு தம் மீது அவதூறு பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவை காவல் ஆணையரிடம் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் புகார் மனு அளித்துள்ளார்.



கோவை: போலி ஆடியோ வெளியிட்டு வதந்தி பரப்புவதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் தி.மு.க.மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளராக இருப்பவர் நா.கார்த்திக். இவர் பேசியதாக சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் கட்சி தலைமை, அமைச்சர்கள் மற்றும் கோவை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோரை விமர்சித்து பேசுவதாக இருந்தது. இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால். தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், இந்த ஆடியோவிற்கு கண்டனம் தெரிவித்து, போலி ஆடியோவை தயார் செய்து தன் மீது சிலர் அவதூறு பரப்புவதாக தெரிவித்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:-

நான் தி.மு.க.வில் மாணவர் அணி, இளைஞர் அணி மற்றும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்துள்ளேன். மாநகராட்சி துணை மேயர், எம்.எல்.ஏ. உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளேன்.

தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், கொள்கைக்கும் குந்தகம் ஏற்படாமல் தி.மு.க. தொண்டர்களையும், பொதுமக்களையும் அரவணைத்து செயல்படுகிறேன். கடந்த அதிமுக ஆட் சியின் போது என் மீது பொய்யாக 39 வழக்குகள் போட்டனர். அந்த வழக்குகளை சட்ட ரீதியாக சந்தித்து வருகிறேன்.

எனது பணிகளை கண்டு பொறாமைப்பட்டு சில சமூக விரோதிகள், நான் பேசியதாக போலி ஆடியோவை தயார் செய்து வதந்தி பரப்ப வெளியிட்டுள்ளனர். இந்த பொய்யான அவதூறான ஆடியோவை வெளியிட்ட சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர போலீசாரிடம் புகார் அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...