மூலனூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.25 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு!

மூலனூர் அடுத்த வண்ணாப்பட்டி ரங்கநாதபெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 23.5 ஏக்கர் புஞ்சை நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து, அறநிலையத்துறை உதவி ஆணையர் பி.ஜெயாதேவி முன்னிலையில் மீட்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: மூலனூர் அருகேயுள்ள ரங்கநாதபெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 23.5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த கொமாரபாளையம் கிராமம் வண்ணாப்பட்டி ரங்கநாதபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 23.5 ஏக்கர் புஞ்சை நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் அறிவுறுத்தலின் படி திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பி.ஜெயாதேவி முன்னிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது.

அப்போது தனி தாசில்தார் மகேஸ்வரன், செயல் அலுவலர், ஆய்வாளர் மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட ரங்கநாத பெருமாள் கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...