மணிப்பூர் கலவரம் - கோவையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் விடுதலை முன்னணியினரால் பரபரப்பு!

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து, கோவையில் ரயில் நிலையத்தை மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


கோவை: மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோவையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் விடுதலை முன்னணி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினர் இடையே கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மணிப்பூரை சேர்ந்த இரு பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மணிப்பூரில் நிலவும் இந்த கலவரத்திற்கு பாஜக அரசு தான் காரணம் என கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், பாஜக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.



பின்னர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் ரயில் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...