கோவையில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தல் - மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது!

மாநில தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, கோவை‌ மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான மறைமுகத்‌ தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தலில் 9 பேர் வெற்றி பெற்றனர்.

தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, கோவை‌ மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான மறைமுகத்‌ தேர்தல்‌ இன்று காலை 9.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ உள்ள விக்டோரியா ஹால்‌ மாமன்ற‌ கூடத்தில்‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

இந்த மறைமுக தேர்தலில்‌ வார்டு எண்‌.7, 9, 17, 38, 39, 43, 44, 47, 48, 56, 74, 75, 78, 85, 86, 90, 91, 95, 96, 97, 98 மற்றும்‌ 99 ஆகிய 22 மாமன்ற உறுப்பினர்கள்‌ தவிர 78 மாமன்ற உறுப்பினர்கள்‌ வருகை புரிந்தனர்‌. வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள்‌ பதவிக்கு 10 மாமன்ற உறுப்பினர்கள்‌ வேட்பு மனு தாக்கல்‌ செய்தனர்‌.

வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள்‌ பதவிக்கு போட்டியிட்ட 10 வேட்பாளர்களில்‌

வார்டு எண் 1 - ஆர்.கற்பகம்

வார்டு எண் 37 - குமுதம்

வார்டு எண் 69 - சரவணக்குமார்

வார்டு எண் 41 - கே.சாந்தி

வார்டு எண் 83 - வி.சுமா

வார்டு எண் 58 - சுமித்ரா

வார்டு எண் 45 - பேபிசுதா

வார்டு எண் 6 - பொன்னுசாமி

வார்டு எண் 76 - ராஜ்குமார்

ஆகிய 9 வேட்பாளர்கள்‌ அதிக வாக்குகள்‌ பெற்று வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்‌.



எனவே, வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில்‌ அதிக வாக்குகள்‌ பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர் சான்றிதழ்களை வழங்கினார்‌.



இந்நிகழ்வில் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்கள்‌, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன்‌ அவர்கள்‌, மண்டல குழு தலைவர்கள்‌, மாமன்ற உறுப்பின்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...