சிவானந்தாகாலணி அருகே தனியார் உணவகத்தில் தீவிபத்து - சமையலறை, பில்லிங் கணினி தீயில் கருகி சேதம்!

சிவானந்தா காலணி பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், சமையலறை முற்றுலுமாக தீயில் கருகிய நிலையில், அருகே இருந்த பில்லிங் கணினியும் தீக்கிரையானது.


கோவை: சிவானந்தா காலணி அருகேயுள்ள தனியார் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சமையலறை, மற்றும் பில்லிங் கணினி தீயில் எரிந்து சேதமானது.



கோவை சிவானந்தா காலணி பகுதியில் உள்ள தனியார் உணவக சமையலறையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.



தீ மளமளவென பரவிய நிலையில், தகவலறிந்து வந்த கோவை வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சமையலறையில் இருந்து அருகே உள்ள பில்லிங் கவுன்டரிலும் தீ பரவியது.



இதையடுத்து நீண்ட நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சமையலறையில் இருந்த பொருட்கள், மற்றும் பில்லிங் கணினி எரிந்து சேதமானது.

இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...