இது என்னோட மண் ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது - காலா பட பாணியில் போஸ்டர் ஒட்டிய திமுகவினர்!

பாஜக தலைவர் அண்ணாமலை இன்று என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை தொடங்கும் நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் காலா பட பாணியில், ‘இது என்னோட மண், ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.



கோவை: கோவையில் திமுக சார்பில் காலா பட பாணியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் காலா பட பாணியில் திமுக மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த், வில்லனை பார்த்து பேசும் "இது என்னோட மண், ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது" என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி காலா படத்தில் ரஜினிகாந்த் நாற்காலியில் கருப்பு உடை அணிந்து கால் மீது கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்திருப்பதை போல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருப்பது போன்று போஸ்டரில் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.



மேலும் இந்த போஸ்டரில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த போஸ்டர்கள் கோவை கோட்டைமேடு உக்கடம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "என் மண் என் மக்கள்" என்ற பயணத்தை இன்று துவங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...