பாதுகாப்பு துறையில் ரூ.300 கோடிக்கு கீழ் உள்ள டெண்டர்களை சிறு குறு தொழில்களுக்கு கிடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது!

300 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள அனைத்து டெண்டர்களையும் சிறுகுறு தொழில்களுக்கு கிடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், டிபன்ஸ் காரிடத்துறையில் கோவை சிறந்து விளங்குகிறது என்றும், ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி டெவலப்மென்ட் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



கோவை: 300 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள அனைத்து டெண்டர்களையும் சிறுகுறு தொழில்களுக்கு கிடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி டெவலப்மென்ட் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் கோயம்புத்தூர் defence conclave 2023 என்ற சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஏரோஸ்பேஸ் மற்றும் டிபன்ஸ் ஃபார் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் அகாடமி என்ற தலைப்பு முன்வைக்கப்பட்டு ஏரோஸ்பேஸ் மற்றும் டிபன்ஸ் துறைகளில் உள்ள தொழில் முதலீடுகள் மற்றும் தொழில் சார்ந்த பங்களிப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இது குறித்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏரோப்ளேன் இண்டஸ்ட்ரி டெவலப் மென்ட் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது, தமிழ்நாட்டில் defence காரிடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் அனைவருக்கும் தெரியும், இதன்மூலம் எப்படி தொழில் துறையை உத்தியோகப்படுத்தி முன்னுக்கு கொண்டு வருவது என முயற்சி செய்து வருகிறோம்.

தமிழ்நாடு அரசாங்கத்திலிருந்து தமிழ்நாடு போன்றவைகள் எல்லாம் மிகவும் உதவிகரமாக உள்ளன இதை ஆரம்பித்த பிறகு தமிழகத்தில் 5000 கோடி முதலீடு வந்துள்ளது இன்னமும் அதிக முதலீடு வரவேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டு கொண்டுள்ளது. எப்படி பெரிய நிறுவனங்களை கொண்டு வருவது என கோவை தற்போது முன்னணியில் உள்ளது.

இங்கு அட்டல் இன்னேஷன் சென்டர் உள்ளது அது மிகவும் உதவிகரமாகவும் இங்கே டிட்கோ ஏரோஸ்பேஸ் பார்க் ஏற்படுத்த உள்ளனர். இப்போது டிபன்ஸ் மார்க்கெட் முன்னேற்றம் அடைந்து காணப்படுகிறது. 300 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள சிறு குறு தொழிலுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

200 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள டெண்டர்களை உலக அளவில் அல்லாமல் இந்தியாவிற்குள் தான் வாங்க வேண்டும் என சட்டம் போட்டுள்ளனர். சிறுகுறு தொழிலுக்கு வருவதற்காக இந்திய அரசு பல ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர். கோவைக்கு பிட்கோ டாட்டா 100 கோடி ரூபாய் அளவிற்கு ஒரு சென்டருக்கும் அமைய உள்ளது.

கோவை இந்த துறையில் நல்ல ஒரு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இன்ஜினியரிங் சார்ந்த தொழில் அதிக அளவில் இருப்பதால் இதுவும் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...