திருப்பூரில் இரவில் பூத்த பிரம்ம கமல பூக்கள் - பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு!

திருமுருகன்பூண்டி அடுத்த தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் மனோகரன் என்பவரது வீட்டில் பூத்துள்ள நிஷாகந்தி என்று அழைக்கப்படும் பிரம்மகமல பூக்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து சென்றனர்.



திருப்பூர்: திருமுருகன்பூண்டி அருகே பூத்துள்ள பிரம்மகமல பூக்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டி, தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் மனோகரன்.



இந்நிலையில் நேற்றிரவு இவரது வீட்டில் இரவில் மட்டும் பூக்கும் நிஷாகந்தி என்று அழைக்கப்படும் பிரம்ம கமல பூக்கள் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட பூக்கள் பூத்துள்ளது.



இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்தனர்.



அதனை தொடர்ந்து பூக்களுக்கு கற்பூர தீபம் காட்டி வழிபாடு செய்தனர்.



மேலும், குழந்தை இல்லாதவர்கள் மருத்துவ குணம் நிறைந்த இந்த பூவை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கையாகும்.

இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் இந்த பூக்களை சாப்பிட்டனர்.



தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இந்த பூக்களை வந்து பார்த்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...