கவுண்டம்பாளையம் மென்ஸ் காலனியில் விவசாயிகள் செழுமை மையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

கோவை கவுண்டம்பாளையம் ரயில்வே மென்ஸ் காலனியில் உள்ள சக்தி பெர்டிலைசர்ஸ் கார்பரேசன் உர நிறுவன மையத்தில் பிரதம மந்திரியின் விவசாயிகள் செழுமை மையத்தை (சில்லரை உர விற்பனை மாதிரி கடை) பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தானில் இருந்துவாறு காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.



கோவை: கவுண்டம்பாளையம் ரயில்வே மென்ஸ் காலனியில் அமைக்கப்பட்டுள்ள பிரதம மந்திரியின் விவசாயிகள் செழுமை மையத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.



கோவை கவுண்டம்பாளையம் ரயில்வே மென்ஸ் காலனியில் உள்ள சக்தி பெர்டிலைசர்ஸ் கார்பரேசன் உர நிறுவன மையத்தில் பிரதமரின் காணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



பிரதம மந்திரியின் விவசாயிகள் செழுமை மையத்தை (சில்லரை உர விற்பனை மாதிரி கடை) பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தானில் இருந்துவாறு காணொலி காட்சி மூலம் நாட்டிற்கு அர்ப்பணித்தார். நாடெங்கிலும் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விவசாயிகள் செழுமை மையங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.



அதில் கோவை கவுண்டம்பாளையம் ரயில்வே மென்ஸ் காலனியில் உள்ள சக்தி பெர்டிலைசர்ஸ் கார்பரேசன் உர நிறுவனம் கோவை மாவட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனம் கோவையில் பிரதம மந்திரியின் விவசாயிகள் செழுமை மையத்திற்கு உதவி செய்து வருகிறது.

மேலும் பிரதமர் யூரியா கோல்டு சல்பர் பூசப்பட்ட யூரியாவையும் அறிமுகப்படுத்தினார். பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 14வது தவணையின் ஒரு பகுதியாக 8.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் கணக்கிற்கு ரூ.17 ஆயிரத்து 500 கோடிக்கும் மேல் பணபரிமாற்றத்தையும் தொடங்கி வைத்தார்.

டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பான ஓ.என்.டி.சி-யில் 1600க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை வரையுறுக்கப்பட்ட நிறுவனங்களாக மேம்பாடுத்துதலும் செய்யப்பட்டது.



கோவை சக்தி பெர்டிலைசர்ஸ் கார்பரேசன் உர நிறுவனம் மையத்தில் பிரதமரின் காணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



இந்த நிகழ்ச்சியில் விவசாய மற்றும் உழவர் நலத்துறையைச் சேர்ந்த வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஷபி அகமது, இந்தியன் பொடாஷ் லிமிடெட் நிறுவன கூடுதல் பொது மேலாளர் ராம் பாபு, மாநில மேலாளர் பார்வதி ராஜா, விற்பனை மேலாளர் மாரியப்பன், சக்தி பெர்டிலைசர்ஸ் கார்ப்பரேஷன் நிறுவன நிர்வாக இயக்குநர் பாண்டியன், பெரியநாயக்கன்பாளையம் உதவி வேளாண்மை இயக்குநர் நமத்துல்லா, விவசாயிகள் செழுமை மைய கோவை நகர நோடல் அதிகாரி பாலாஜி உத்தமராமசாமி, கோவை வடக்கு நோடால் அதிகாரி சங்கீதா ரங்கராஜன், கோவை தெற்கு நோடல் அதிகாரி வசந்தராஜன், பி.ஜே.பி மாநில துணைத்தலைவர் பேராசிரியர்.கனகசபாபதி, பொதுசெயலாளர் பீர்த்தி லட்சுமி, மண்டல தலைவர் விஜய காண்டிபன் உட்பட சுமர் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



மேலும் வேளாண் உபகரணங்கள், மானிய உரங்கள், நீரில் கரையும் உரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...