தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டம்

கோவை நீலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப்போக்கு காரணமாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டி, இறந்தவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை நீலாம்பூர் பகுதியில் ராயல் ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கோத்தகிரி ஒன்றிய வட்டாரா வளர்ச்சி அலுவலர் சுரேஷ் குமார் என்பவர், சளி தொந்தரவு காரணமாக கடந்த செவ்வாய்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

வியாழக்கிழமை வீடு திரும்புவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென, வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சுரேஷ் குமாரின் உறவினர்கள் செவிலியர்களுக்கு தகவல் அளித்தும், அரை மணி நேரத்திற்கு மேலாகியும், மருத்துவர்கள் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

பின்னர், வந்த மருத்துவர்கள் நோயாளியை தீவிர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் செல்லும் பொழுது உயிரிழந்துள்ளார்.

மருத்துவர்களின் அலட்சியப் போக்கு காரணமாகவே வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழந்ததாகவும், மருத்துவ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவரது உறவினர் கூறுகையில், மூச்சு தினறல் ஏற்பட்டது குறித்து தகவல் அளித்து அரை மணி நேரத்திற்கு மேலாகியும் மருத்துவர்களோ செவிலியர்களோ யாரும் வந்து பார்க்க வில்லை. பின்னர் வந்த மருத்துவர்களும் நோயாளிக்கு ஆக்சிஜன் கூட வைக்காமல் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினர். மேலும், மருத்துவமனையில் போதிய சிகிச்சை வசதிகள் இல்லை எனவும் தெரிவித்தார்.

எனவே, அவரது உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவ நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இது குறித்து மருத்து நிர்வாகம் தரப்பில் கூறுகையில், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...