உடுமலை மலைகிராமங்களில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி!

உடுமலை அருகேயுள்ள பொறுப்பாறு மலைகிராமத்தில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை, மாவட்ட நக்சல் பிரிவு மற்றும் சாய் ஸ்பீச், ஹியரிங் எய்ட் சென்டர் இணைந்து, காது கேளாதோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மலைகிராம மக்கள் பங்கேற்று, பரிசோதனை மேற்கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த பொறுப்பாறு மலைக்கிராமத்தில் நடைபெற்ற காது கேளாதோருக்கான சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமான மக்கள் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் பொறுப்பாறு மலைக்கிராம மக்களுக்கு எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை, திருப்பூர் மாவட்டம் நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் சாய் ஸ்பீச் & ஹியரிங் எய்ட் சென்டர் உடன் இணைந்து நடத்தும் காது கேளாமை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.



இதில் நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ரவி தலைமை வகித்தார் மேலும் காது பரிசோதனை நிபுணர். கார்த்திக் காது பற்றிய விழிப்புணர்வுகளை வழங்கினார். ‍‌‌‍‌‍‌‌எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் திரு நெல்சன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பற்றி சிறப்புரையாற்றினார்,



இந்த நிகழ்வில், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை உறுப்பினர் சிவலிங்கம் மற்றும் திருப்பூர் மாவட்டம் நக்சல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொறுப்பாறு மலை கிராம மக்கள் பரிசோதனை செய்து கொண்டு பயன் பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...