பன்னிமடை அருகே வாழை தோட்டத்தை சேதப்படுத்திய காட்டு யானை - பரபரப்பு!

பன்னிமடை அடுத்த பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள நரசிம்மராஜ் என்பவரது வாழைத்தோட்டத்தில் நேற்றிரவு புகுந்த ஒற்றை காட்டு யானை 100க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டு சென்றது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பன்னிமடை அருகே ஒற்றை காட்டு யானை வாழைத் தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆனைகட்டி மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி மலை அடிவார பகுதிகளான மாங்கரை, தடாகம், வரப்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.



இந்த நிலையில் நேற்றிரவு பன்னிமடை அடுத்த பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள நரசிம்மராஜ் என்பவரது வாழை தோட்டத்தில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது.



அந்த தோட்டத்தின் உள்ளே சென்ற யானை, அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...