மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் - தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குனர் ஆய்வு!

குனியமுத்தூர் உயர்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் மகளிர் உரிமை திட்டத்தின் முதலாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாமை கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குனருமான ஜெயஸ்ரீ முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் முதலாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் 24ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து வருகின்றனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் முகாமை, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் பல்வேறு மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி குனியமுத்தூர் உயர்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் முகாமை கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குனருமான ஜெயஸ்ரீ முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...