நமக்கு நாமே திட்ட பணிகள் குறித்து தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆய்வு!

கோவை மாவட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குனருமான ஜெயஸ்ரீ முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவையில் நமக்கு நாமே திட்ட பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.



கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குனருமான ஜெயஸ்ரீ முரளிதரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி, மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 24 வது வார்டுக்கு உட்பட்ட டைட்டில் பார்க் சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால், புதிய தார்சாலை அமைத்தல், சாலை தடுப்பு அபிவிருத்தி பணிகள் செய்தல் மற்றும் நடைபாதை தளங்களுக்கான அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகராட்சி மேயர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...