உடுமலை அருகே பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்!

கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை அடுத்த பூளவாடி பகுதியில் கைத்தறி நெசவாளர்கள் குடும்பங்களின வாழ்வாதாரம் காத்திட ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: உடுமலை அருகே கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கைளை வலியுறுத்தி நடைபெற்ற ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



உடுமலை அடுத்துள்ள பூளவாடி ஊராட்சி பகுதியில் கைத்தறி நெசவாளர்கள் குடும்பங்களின வாழ்வாதாரம் காத்திட ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது அவர்கள், கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி ரகங்களை கைத்தறிக்க என்று உறுதிப்படுத்த வேண்டும். 60 வயது பூர்த்தி அடைந்த கைத்தறி நெசவாளர்களின் ஓய்வூதியத்தை மாதம் 3000 ஆக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டு நூல் சரிகை முதலிய மூலப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கம் இன்றி சீரான முறையில் ஒரே விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச தறி சாமான் உதிரி பாகங்கள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு வங்கி ஏற்படுத்தி நெசவாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் நிதியுதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். 2007ல் இருந்து 2013ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்து வந்த கைத்தறி நெசவாளர்கள் நலன் காப்பீடு திட்ட மருத்துவ அட்டை மீண்டும் இலவசமாக கைத்தறி நெசவாளர்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும்.



இவ்வாறான கோரிக்கைகள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில், பூளவாடி, வடுகபாளையம், வீதம்பட்டி, பெல்லம்பட்டி, கொள்ளுபாளையம், வி.வேலூர், ராமச்சந்திராபுரம் உட்பட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆண்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...