நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து நச்சு புகை வெளியேற்றம் - பொதுமக்கள் முற்றுகை போராட்டம்!

பல்லடம் அடுத்த 63.வேலம்பாளையம் அருகேயுள்ள வி.ஆர்.பி நகரில் செயல்பட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தார் தொழிற்சாலையில் இருந்து நச்சுப்புகை வெளியறுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகே நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தார் தொழிற்சாலையில் இருந்து நச்சுப்புகை வெளியறுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பல்லடம் அடுத்த 63.வேலம்பாளையம் அருகேயுள்ள வி.ஆர்.பி நகரில் தனியாருக்கு சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.



இந்த தார் தயாரிக்கும் தொழில்சாலையில் இருந்து நச்சுப்புகை வெளியேறுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அருகில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் தொடர்ச்சியாக புகார் மனு அளித்துள்ளனர்.



இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் தார் தயாரிக்கும் தொழிற்சாலை முன்பு தரையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் இந்த தார் தயாரிக்கும் தொழிற்சாலை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமானது என்கிற அதிர்ச்சி தகவலையும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, தற்போது வெளியாகியிருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் பேசும் வசனங்கள் வெறும் நடிப்பிற்காக தானா? என கேள்வி எழுப்பினர்.

நச்சு புகையை வெளியேற்றும் தார் தொழிற்சாலை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...