பாமக தலைவர் அன்புமணி கைதை கண்டித்து உடுமலையில் அரசு பேருந்துகளை பாமகவினர் சிறைபிடித்ததால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாசை போலீசார் கைது செய்ததை கண்டித்து, உடுமலையில் அரசு பேருந்துகளை பாமகவினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து உடுமலையில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாசை போலீசார் கைது செய்தனர்.



இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா. பழனிச்சாமி தலைமையில் அரசு பேருந்தை சிறைபிடித்து 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மேற்கு மாவட்ட தலைவர் சிங்காரவேல், மாவட்ட மாவட்ட அமைப்பு செயலாளர் மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் வாளவாடி பழனிச்சாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில், குடிமங்கலம் ஒன்றிய ஊடக பேரவை செயலாளர் மகேந்திரவர்மன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ் துணைச் செயலாளர் நாகராஜ் மாவட்ட ஊடகப் பேரவை செயலாளர் கனகராஜ் உடுமலை நகர செயலாளர் பிரபாகரன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...