மூலனூரில் ரூ.1.2 லட்சம் மதிப்பிலான பன்றிகள் திருட்டு - 6 பேர் கைது!

தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதியில் சுமார் 1.20 மதிப்பிலான பன்றிகளை திருடிய தாராபுரம் ரோடு பழனி பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகியான அருண்குமார் (32) மற்றும் அவரது நண்பர்கள் மணிகண்டன் (24), ராசுகுட்டி (25), ரமேஷ் குட்டி(25), விஜயகுமார்(33), தவசியப்பன் (29) உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதியில் சுமார் 1.20 மதிப்பிலான பன்றிகளை திருடிய வழக்கில் ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் கன்னிமார் கோவில் கொழிஞ்சி காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (20) என்பவர் குடும்பத்துடன் பன்றி வளர்த்து வியாபாரம் செய்து வந்தார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னிமார் கோவில் புதூர் கொழிஞ்சி காட்டு தோட்டத்தை ஒப்பந்தம் எடுத்து அங்கு பட்டி அமைத்து 50 பன்றிகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், மனைவிக்கு வளைகாப்பு என்பதால் கடந்த ஜூன் 30 ஆம் தேதி பொள்ளாச்சியில் உள்ள கோவில்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளார்.

இதனிடையே சந்தோஷின் தந்தை அன்று மாலை பன்றிகளை பட்டியில் அடைத்து விட்டு மறுநாள் காலையில் 6 மணிக்கு வந்து பார்க்கும் போது 20 பன்றிகளையும் காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து மூலனூர் காவல் நிலையத்தில் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 20 பன்றிகள் திருட்டுப் போனது குறித்து புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அசோக் லேலண்ட் தோஸ்த் வண்டியில் 20 பன்றிகளுடன் ஆறு பேர் சென்றதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

வண்டியின் பெயர் பலகை மற்றும் வண்டியின் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதில் பழைய தாராபுரம் ரோடு பழனி பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகியான அருண்குமார் (32) தலைமையில் திருடப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.



இதனையடுத்து, அருண்குமார் உடன் திருட்டில் ஈடுபட்ட மணிகண்டன் (24), ராசுகுட்டி (25), ரமேஷ் குட்டி(25), விஜயகுமார்(33), தவசியப்பன் (29) உள்ளிட்ட ஆறு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.



மேலும் திருடப்பட்ட 20 பன்றிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட தோஸ்த் வாகனத்தையும் பறிமுதல் செய்த மூலனூர் காவல் துறையினர், தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...