அண்ணாமலையின் பாதயாத்திரையை யாரும் ரசிக்கவில்லை - தபெதிக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் விமர்சனம்!

மணிப்பூர் மாநில மக்களுக்காக அழுது கொண்டிருக்கின்ற நிலையில், அண்ணாமலையின் பாதயாத்திரையை யாரும் ரசிக்கவில்லை என திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரின் காயக்கட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.



திருப்பூர்: அண்ணாமலையின் பாதயாத்திரையை யாரும் ரசிக்கவில்லை என தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் இதில் ஏராளமானோர் கை, கால்களை இழந்தும், உடல் அளவிலும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

மேலும் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் மணிப்பூர் மாநில மக்களின் நிலைமையை உணர்த்தும் வகையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருப்பூரில் தந்தை பெரியார் சிலையிலிருந்து மாநகராட்சி அலுவலகம் வரை கை, கால்களை இழந்தது போலவும், உடல் முழுவதும் காயங்கள் பட்டது போல கட்டு அணிந்து ஊர்வலமாக சென்றனர்.



மேலும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் பேசியதாவது,



மணிப்பூர் மாநிலத்திற்கு இந்தியாவில் எங்கும் இல்லாத அளவு தமிழகத்தில் ஆதரவு குரல் இருந்து வருகிறது.

தமிழக முதல்வர் மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களுக்கு அடைக்கலமும், ஆதரவும் தருவதாக தெரிவித்தது வரவேற்கத்தக்கது. இதனை திசை திருப்பவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார்.

மணிப்பூர் மக்களுக்காக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க மக்கள் அண்ணாமலையின் பாதயாத்திரையை ரசிக்கவில்லை, இது தமிழக மக்களிடம் எடுபடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...