கோவை அருகே மொபைல் டாய்லெட் நிறுவனத்தில் தீ விபத்து - ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதம்!

கவுண்டம்பாளையம் அடுத்துள்ள உருமாண்டம்பாளையம் பகுதியில் செய்ல்பட்டு வரும் மொபைல் டாய்லெட் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில், சுமார் 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமாகின.



கோவை: கவுண்டம்பாளையம் அருகே மொபைல் டாய்லெட் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், சுமார் 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் அடுத்துள்ள உருமாண்டம்பாளையம் பொன்விழா நகர் அருகே சேன்டிஸ் என்ற மொபைல் டாய்லெட் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் ராஜேஷ்குமார், ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் முக்கிய விழாக்களில் மொபைல் டாய்லெட்களை வாடகைக்கு விட்டு வருகின்றார். மேலும் விற்பனையும் செய்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்திற்கு அருகிலேயே கோவை – மேட்டுப்பாளையம் செல்லும் ரயில்வே பாதையும் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இந்த நிறுவனத்தின் உள்ளே 5 ஊழியர்கள் டாய்லெட் பாக்சில் உள்ள பொருட்களை பிரித்து கொண்டு இருந்தனர்.



அப்பொது திடீரென தீ பிடித்துள்ளது. உடனடியாக அவர்கள் வெளியே ஓடியுள்ளனர்.

அதற்குள் தீயானது மளமளவென அங்கிருந்த மொபைல் டாய்லெட்களில் முழுவதுமாக பரவியுள்ளது.



இந்த தீ விபத்தின் காரணமாக அந்தபகுதி முழுவதும் கரும்புகை பரவியது.



இந்த கரும்புகை பரவியது சுமார் 2 கிலோ மீட்டர் வரை பார்க்க முடிந்தது.



இதுகுறித்து அந்தபகுதி மக்கள் உடனடியாக கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.



தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்த தீவிபத்தின் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர்சேசம் ஏதுவும் ஏற்படவில்லை.



அதற்குள் தீ கம்பெனி முழுவதும் பரவி அங்கிருந்த ஆபிஸ் ரூம்கள் மற்றும் அனைத்து மொபைல் டாய்லெட்டுகளையும் எரித்து சேதமானது.



எரிந்த மொபைல் டாய்லெட்டிகளின் மதிப்பு சுமார் 7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...