கோவையில் பெண்ணை கொலை செய்து விட்டு 5 சவரன் நகை கொள்ளை - மர்ம நபர்கள் வெறிச்செயல்!

கோவை சேரன்மாநகர் அடுத்த பாலாஜி நகரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு, அவரது கழுத்தில் இருந்த சுமார் 5 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை சேரன்மாநகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 5 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த சேரன்மாநகர் அருகேயுள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் தனது மனைவி ஜெகதீஸ்வரி மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மகளுடன் வசித்து வந்துள்ளார்.

பெயிண்டிங் கான்டிராக்டரான சக்கரவர்த்தி வேலை நிமித்தமாக அன்னூருக்கு சென்றுள்ளார். மேலும் 12ஆம் வகுப்பு படித்து வரும் மகள் பள்ளி சென்றுள்ளார். வழக்கம்போல் மகளை அழைத்து செல்வதற்காக வரும் தாய் ஜெகதீஸ்வரி வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், பள்ளி முடிந்ததும் ஜெகதீஸ்வரியின் மகள் 4.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை தனது அம்மாவை எதிர்பார்த்து காத்திருந்து விட்டு, அம்மா வராததால் பள்ளியில் இருந்து நடந்தே வீட்டிற்கு 6.30 மணிக்கு வந்துள்ளார்.



வீட்டிற்குள் சென்ற மாணவி தனது தாய் கட்டிலில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, என்ன செய்வதென்று தெரியாமல் கதறிய சிறுமி அன்னூருக்கு வேலைக்கு சென்ற தனது தந்தை சக்கரவர்த்திக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும் உயிரிழந்த ஜெகதீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலிசார் அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் ஜெகதீஸ்வரியை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாகவும், ஜெகதீஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் செயின் மற்றும் காதில் இருந்த ஒரு சவரன் தோடு ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

தங்க நகைக்காக ஜெகதீஸ்வரியை மர்ம நபர்கள் கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...