தாராபுரம் அருகே மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு மையங்களில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு!

தாராபுரம், குண்டடம் மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு முகாம்களில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: தாராபுரம் வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் மகளிர் உரிமை திட்ட முகாம்களில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

தாராபுரம், குண்டடம் மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருகிறது.



இந்த மையங்களில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்.



விண்ணப்ப பதிவு மையங்களை ஆய்வு மேற்கொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கூறியதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக தற்போது நடைபெற்று வரும் முகாம்களுக்கு விண்ணப்பபடிவங்கள் மற்றும் டோக்கன்கள் ஒவ்வொரு வீடுகளுககும் நேரடியாக சென்று வழங்கப்பட்டது.

முதல் கட்டமாக கடந்த 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 2,86,631 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2ஆம் கட்டமாக, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்ப பதிவு செய்யும் பணிகள் வருகிற 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 மற்றும் மண்டலம்-4 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், 6 நகராட்சி மற்றும் 15 பேரூராட்சிகளிலும் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், நஞ்சியம்பாளையம் ஊராட்சி, குப்பிச்சிபாளையம் நியாயவிலைக்கடை, நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், தொப்பம்பட்டி ஊராட்சி வரப்பாளையம் சமுதாய நலக்கூடம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சூரியநல்லூர் ஊராட்சி, வேங்கிபாளையம் அங்கன்வாடி மையம், கண்ணாங்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகம், மூலனூர் ஊராட்சி ஒன்றியம். பொன்னிவாடி ஊராட்சி எலுக்காம்வலசு.

கிளாங்குண்டல் ஊராட்சி பட்டுத்துறை, குமாரபாளையம் ஊராட்சி தம்மங்கரை, கோட்டைமருதூர் ஊராட்சி பிச்சைக்கல்பட்டி, கம்பளியம்பட்டி, தூரம்பாடி ஊராட்சி நத்தப்பாளையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு மையத்தை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, தாராபுரம் ஆர்.டி.ஓ செந்தில் அரசன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் தன செந்தில்குமார். தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் பிரபு, நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...