டெல்லியில் நடைபெற்ற கியூபா நாட்டின் புரட்சி தின விழாவில் பங்கேற்ற கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன்!

கியூபா நாட்டின் புரட்சி தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, டெல்லியில் உள்ள கியூபா நாட்டின் தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், கோவை நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஆர்.நடராஜன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.


கோவை: டெல்லியில் நடைபெற்ற கியூபா நாட்டின் புரட்சி தின விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூக்கின் அருகில் இருந்து கொண்டு சோசலிச செம்பதாகையை உயர்த்திப் பிடித்து வரும் தேசம் கியூபா . கொரானா பெருந்தொற்றின் போது 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தனது மருத்துவ குழுவை அனுப்பி சேவை ஆற்றிய நாடு.

தரமான கல்வி, தனிச்சிறப்பு மிக்க மருத்துவம் ஆகியவற்றை தனது குடிமக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கி வரும் நாடு கியூபா. அத்தகைய சிறப்பு பெற்ற கியூபா நாட்டின் புரட்சி தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அதை முன்னிட்டு இன்று புதுடெல்லியில் இந்தியாவிற்கான கியூபா தூதரகம் புரட்சி தின விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

அந்த நிகழ்ச்சியில் நான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். இந்தியாவிற்கான கியூபா தூதர் அலெக்சாண்டரோ சிமன்காஸ் மாரீன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களை இந்திய மக்களின் சார்பாக தெரிவித்தோடு, கியூபா நாட்டின் மீதான இந்திய மக்களின் நேசம் என்றென்றும் தொடரும் என்றும் தெரிவித்தேன்.



பல்வேறு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறப்பு விருந்தினர்களாக கியூபா புரட்சி தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். தோழர் பிடல் காஸ்ட்ரோ மற்றும் தோழர் சே குவேரா தலைமையில் நடைபெற்ற மகத்தான கியூப புரட்சி குறித்தும், அது கியூப சமூகத்தில் ஏற்படுத்திய அற்புதமான மாற்றங்கள் குறித்தும் கலந்துரையாடினர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...