தாராபுரம் அருகே கோழி பண்ணையில் 850 கிலோ இரும்பு கம்பிகளை திருடிய காவலாளி கைது!

தாராபுரம் அடுத்த நாரணாபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கோழிப்பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வந்த செல்வராஜ், தனது நண்பருடன் சேர்ந்து, ஆட்டோ மூலம் 850 கிலோ அளவிலான கம்பிகளை திருடி சென்ற சம்பவம் தொடர்பாக காவலாளி செல்வராஜை கைது செய்த போலீசார், கூட்டாளி திருமலைசாமியை தேடி வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே கோழிப்பண்ணையில் இருந்து 850 கிலோ இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற காவலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் அருகேயுள்ள நாரணாபுரம் பகுதியில் தனியார் கோழிப்பண்ணை கட்டப்பட்டு வருகிறது. அங்கு நாரணாபுரம் மேற்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் (56) என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் செல்வராஜ் தனது கூட்டாளியான அதே பகுதியை சேர்ந்த திருமலைசாமி என்பவருடன் சேர்ந்து இரவு நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 850 கிலோ இரும்பு கம்பிகளை வாடகை ஆட்டோ மூலம் திருடி வந்துள்ளார்.

அப்போது அங்கு வேலை செய்து வந்த பரமத்தி வேலூரை சேர்ந்த கார்த்திக் (34) என்பவர் ஆட்டோவை தடுத்து நிறுத்தி நிறுவனத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் நிர்வாகம் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கார்த்திக்கிடம் புகாரை பெற்ற தாராபுரம் குற்றப்பிரிவு காவல் துணை ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரும்பு கம்பியை வாகனத்துடன் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது செல்வராஜ், திருமலை சாமியுடன் 850 கிலோ இரும்பு கம்பிகளை திருடியதாக ஒப்புக்கொண்டார். பிறகு போலீசார் செல்வராஜ் மற்றும் திருமலைசாமி இருவர் மீது வழக்குபதிவு செய்து செல்வராஜை மட்டும் கைது செய்தனர்.

மேலும், திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய கூட்டாளி திருமலைசாமியை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...