பல்லடம் அருகே பாஜக நிகழ்ச்சிக்கு சென்ற வேன் மீது லாரி மோதி விபத்து - 6 பேர் காயம்!

ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள பாஜக நிகழ்ச்சிக்கு சென்ற டிரம்ஸ் கலைஞர்களின் வேன் மீது அடுத்தடுத்து இரண்டு லாரிகள் மோதிய விபத்தில், ஆறு பேர் படுகாயமடைந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: ராமேஸ்வரத்தில் நடைபெறவிருந்த பாஜக நிகழ்ச்சிக்கு சென்ற இசைக்கலைஞர்கள் வாகனம் மீது லாரி மோதி விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

கோவையை சேர்ந்த தினேஷ் என்பவர் தனது ட்ரம்ஸ் கலைக்குழுவினர்‌ 12 பேருடன் நேற்று இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரத்தில் நடைபெறவிருந்த பாஜக பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.



நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே மாதப்பூர் என்ற இடத்தில் அவர்கள் பயணித்த வேன் வந்தபோது, ஈரோட்டில் இருந்து பல்லடம் நோக்கி வந்த ஈச்சர் வாகனம் அந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதைத்தொடர்ந்து சிவகாசியில் இருந்து கோவை நோக்கி வந்த லாரியும் ஈச்சர் வேன் மற்றும் ட்ரம்ஸ் கலைஞர்கள் பயணித்த வேன்மீது அடுத்தடுத்து மோதி விபத்துள்ளானது.



இந்த விபத்தில் கோவையை சேர்ந்த டிரம்ஸ் கலைஞர்கள் கௌதம், சரவணன், சபரீஷ், மனோஜ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பல்லடம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஈச்சர் வாகன ஓட்டுநர் சுப்பிரமணியன் என்பவருக்கு தலை மற்றும் முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு நடந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...