துடியலூர் அருகே ஆடி சொகுசு காரை ஓட்டி வந்து விபத்து - இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…!

கேரளா மாநிலம் ஆனைகட்டி சேர்ந்தவர் விஷ்ணு (26), அவருடன் துடியலூர் சேர்ந்த சையது முகமது (30), கேரளா ஆனைகட்டி அகழி பகுதியைச் சேர்ந்த மிதுனியம் (27), இவர் நேற்று மது போதையில் தனது ஆடி சொகுசு காரை ஓட்டிக்கொண்டு வடமதுரையில் இருந்து பழனி கவுண்டன்புதூர் செல்லும் சாலையில் வேகமாக ஓட்டிச் சென்றார்.



கோவை: கேரளா மாநிலம் ஆனைகட்டி சேர்ந்தவர் விஷ்ணு (26) இவர் நேற்று மது போதையில் தனது ஆடி சொகுசு காரை ஓட்டிக்கொண்டு வடமதுரையில் இருந்து பழனி கவுண்டன்புதூர் செல்லும் சாலையில் வேகமாக ஓட்டிச் சென்றார். 

அவருடன் துடியலூர் சேர்ந்த சையது முகமது (30) கேரளா ஆனைகட்டி அகழி பகுதியைச் சேர்ந்த மிதுனியம் (27), ஆகியோர் சென்றனர். 



அப்போது அதிவேகமாக வந்து பழனிகவுண்டன் புதூர் செல்லும் சாலையில் திருப்ப முயன்றது போது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், சாலையில் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்த அஜய் (29), என்பவர் மீது மோதி, பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த கோவை ரோஸ்கார்டன் தென்றல் நகரை சேர்ந்த சசிரேகா (29) என்ற பெண் மீதும் மோதியது. 



இதில் சசிரேகா பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜய் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துடியலூர் போலீசார் மது போதையில் காரில் ஓட்டி வந்த விஷ்ணு பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



மது போதையில் ஓட்டி வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து இருவர் மீது மோதி சாலை ஓரத்தில் இருந்த புதர்க்குள் சென்று நின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...