உடுமலையில் பிரதமர் மோடியின் படத்தை உடைக்கும் மர்ம நபர் - வைரலாகும் வீடியோ!

உடுமலை கிழக்கு ஒன்றிய பாஜக தலைவரான பாலசுப்பிரமணியன் என்பவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த பிரதமர் மோடியின் புகைப்படம், பாஜக கொடி ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



திருப்பூர்: உடுமலை அருகே பிரதமர் மோடியின் புகைப்படத்தை மர்ம நபர் ஒருவர் உடைத்து சேதப்படுத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கண்ணமநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் உடுமலை கிழக்கு ஒன்றிய பாஜக தலைவராக இருந்து வருகிறார்.



இந்நிலையில் இவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை உடைத்தும், கட்சி கொடிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.



இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்டம் தழுவிய அளவில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தெரிவித்துள்ளார்.

இதனிடையே மர்ம நபர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை உடைத்து சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...