குடிசைமாற்று வாரிய குடியிருப்பு மக்களை இணைக்க மறுக்கும் மலுமிச்சம்பட்டி ஊராட்சி - ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா!

மலுமிச்சம்பட்டியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் கோவையின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் இடம்பெயர்ந்து உள்ளனர். இப்பகுதியை மலுமிச்சம்பட்டி ஊராட்சி நிர்வாகம் தங்களுடன் இணைத்து கொள்ள மறுப்பதாக கூறி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: மலுமிச்சம்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பை இணைக்க மறுக்கும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கோவை மாநகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்த பொதுமக்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு அங்கு பொதுமக்கள் குடிபெயர்ந்தனர்.



ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு குடிப்பெயர்ந்த நிலையில், மலுமிச்சம்பட்டி ஊராட்சி நிர்வாகம் தங்களை ஊராட்சியுடன் இணைக்க மறுப்பதாக குற்றம்சாட்டி அங்கு வசிக்கும், மலுமிச்சம்பட்டி ஹவுசிங் யூனிட் குடியிருப்போர் பொது நல சங்க மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் தற்போது வரை செய்து தரவில்லை எனவும் குற்றம் சாட்டி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது, அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள 1400 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு போதுமான தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. அங்குள்ள ஒன்பது போர்வெல் மோட்டார்கள் பழுதடைந்து விட்டது.

இப்பகுதியில் போக்குவரத்து வசதி இல்லை. போர்க்கால அடிப்படையில் அங்கு பேருந்து வசதிகளை செய்து தர வேண்டும். இங்கு பல்வேறு குற்ற செயல்கள் நிகழ்ந்து வரும் சூழலில், வருகை தரும் போலீசாரும், ரோந்து பணிகளை மேற்கொள்வதில்லை.

ஒவ்வொரு பிளாக்குகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். மேலும் அங்கு தூய்மை பணிகளும் சரிவரும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதால் கழிவு நீர் பொங்கி துர்நாற்றம் வீசி வருவதால், நோய் தொற்று பரவுகிறது.

குறிப்பாக மலுமிச்சம்பட்டி ஊராட்சி நிர்வாகம் தங்களை ஊராட்சியுடன் இணைக்க மறுக்கிறது. இதுகுறித்து நாங்கள் கேட்டால் உரிய விளக்கம் அளிப்பதில்லை. இதனால் ரேஷன் உட்பட அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெறுவதற்கு மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம்.

மேலும் எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் தங்களுடைய ஆதார் கார்டு ரேஷன் கார்டு போன்ற அனைத்து அரசு ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...