தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - முதல்வருக்கு நன்றி தெரிவித்த திமுக செயலாளர் இல.பத்மநாபன்

சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், நான்காவது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் நன்றி தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: தீரன் சின்னமலை நினைவு தினத்தினை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்த முதலமைச்சருக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் நன்றி தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆடி பதினெட்டாம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமரிசையாக அவரது நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அனைத்து தரப்பு மக்களும் இதனை கொண்டாட கூடிய வகையில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் , மாநகராட்சி நான்காவது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்திருந்தார்.

இதனை ஏற்று தற்போது தமிழக முதல்வர் ஆடி பதினெட்டாம் நாள் தீரன் சின்ன மலை நினைவு தினத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், இந்த உத்தரவை அறிவித்த தமிழக முதல்வருக்கும், பரிந்துரை செய்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கும் இல.பத்மநாபன் நன்றி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...