கண்வலி மூலிகைக்கிழங்கு சாகுபடி விலை வீழ்ச்சி - கவலையில் விவசாயிகள்!

கண்வலி மூலிகைக்கிழங்கு சாகுபடி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.3000ஆக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி கண்வலி மூலிகைக்கிழங்கு விவசாயிகள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி கள்ளிமந்தயத்தில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.



திருப்பூர்: ஆதார விலையை ரூ.3000ஆக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக கண்வலி மூலிகை கிழங்கு விவசாயிகள் அறிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம், மூலனூரில் திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த கண்வலி மூலிகை பயிர் செய்யும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் மூலனூரில் மீனாட்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு கண்வலி விதை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் லிங்கசாமி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர் பாலு மற்றும் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தொடக்கத்தில் மூலனூர் சுற்றுவட்டாரத்தில் பயிரிடப்பட்ட கண் வலி பயிர் தற்போது கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. இப்பயிரிலிருந்து கிடைக்கும் விதைகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கண் வலி கிழங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இடைத்தரகர்கள் கூட்டணி அமைத்து கண்வலி விதையின் விலையைக் குறைத்து விடுகின்றனர். இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர்.

இதைத் தடுக்கும் வகையில் ஆதார விலை 3000 நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு வலியுறுத்தி கண்வலி விவசாயிகள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி கள்ளிமந்தயத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் தலைவர் ஈசன் முருகசாமி கூறியதாவது,



உலகத்திலேயே கண் வலி விதை உற்பத்தி செய்யப்படும் மாநிலம் தமிழ்நாடு தமிழ்நாட்டில், மூலனூர், கள்ளிமந்தயம், அரவக்குறிச்சி போன்ற பகுதிகளில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

மிகச் சிறந்த மருத்துவ தாவரமான இது பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது கண்வலி விதையை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கிலோ 3800 க்கு விற்பனை செய்யப்பட்ட கண்வலி விதைகள் தற்பொழுது ஒரு 1500 க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைகின்றனர். 

தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு மூலிகைப் பொருட்களை அனுப்புவதற்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மூலிகை நிறுவனங்களை நடத்தி வருகிறது. இதில் 60க்கும் மேற்பட்ட தாவரங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். 

அந்த நிறுவனம் கண் வலி விதைகளை ரூபாய் 3000 திற்கு விவசாயிகளிடமிருந்து வாங்க வேண்டும் அதன் மூலம் மருந்துகள் தயாரித்து ஏற்றுமதி செய்ய வேண்டும் அப்படி செய்யும் பட்சத்தில் விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள முடியும். 

எனவே அரசாங்கம் விவசாயிகளுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தும் தீர்வு காணப்படவில்லை எனில் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து விவசாயி ஒருவர் கூறியதாவது. ஒரு கிலோ கண்வலி விதை ரூ.1,500-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கரில் கண்வலி செடி சாகுபடி செய்ய 600 முதல் 850 கிலோ கண்வலி கிழங்கு தேவைப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ கிழங்கு ரூ.500க்கு விற்கப்பட்டது.

அதன்படி ஒரு ஏக்கருக்கு விதைப்பதற்கு கிழங்கு மட்டும் ரூ. 3 லட்சம் தேவைப்படுகிறது. பிறகு அதற்கு கம்பி வேலி அமைக்கவும் உரம் மருந்து வேலையாட்கள் கூலி மற்றும் பராமரிப்பு என ஒரு ஏக்கர் கண்வலி பயிர் சாகுபடி செய்ய ரூ.2 லட்சம் வரை செலவாகிறது. தற்போது ஒரு கிலோ கண்வலி வதை ரூ.1,500-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் கண்வலி பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் கல்வலி விதைகளை 3000 ஆரம்பகட்ட விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூலமாக கண்வலி விதைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

கேரளா அரசு ரப்பர்க்கு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 170 குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயம் செய்துள்ளது. ரப்பர் ரூபாய் 170 க்கு குறைவாக விற்கும் போது, குறைவாக விற்கும் விலையை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. அதே போல் 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்துள்ளது. தமிழ்நாடு அரசும் பாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து வழங்கி வருகிறது.

கண்வலி விதை செடிகளுக்கு பயிர் காப்பீடு, விதைகளுக்கு பொருளீட்டு கடன், பயிர்கடன், நில மேம்பாட்டு கடன் ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...