ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கபட்ட பட்டா ரத்து செய்யப்பட்டதாக கூறும் அதிகாரிகள் - பொதுமக்கள் மனு!

மதுக்கரை அடுத்த வீரகேரளம் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டு விட்டதாக பிரசிடென்ட் ரங்கசாமி கூறுவதாகவும் அந்த நிலத்தை தங்களுக்கே தர வேண்டுமென பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: மதுக்கரை அருகே வீரகேரளம் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறுவதாக அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம், ஓராட்டுகுப்பை கிராமத்தில் வீரகேரளம் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த பட்டா ரத்து செய்யப்பட்டு விட்டதாக பிரசிடென்ட் ரங்கசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்கள் பட்டா ரத்து செய்யப்படவில்லை என கூறி எனவே தங்களுக்கு அளிக்கப்பட்ட நிலத்தை தங்களுக்கே தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு அந்த இடத்தை தங்களுக்கே வழங்க வேண்டும், வீடு கட்டுவதற்கும் உதவி புரியுமாறு கோரிக்கை விடுத்தனர். அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாங்கள் குடும்பத்துடன் அப்பகுதியில் போராட்டம் மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...