பல்லடத்தில் பாட்டிலுக்கு ரூ.15 அதிகமா? - வெகுண்டெழுந்த விசைத்தறி உரிமையாளர்!

பல்லடம் அருகே பனானா லீஃப் என்ற தனியார் உணவகத்தில் வழங்கப்பட்ட பில்லில் கூடுதல் தொகை அச்சிடப்பட்டிருந்ததை தட்டி கேட்டதற்கு, முறையாக பதில் அளிக்காமல், ஆட்களை வைத்து மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே தனியார் உணவகத்தில் வழங்கப்பட்டபில்லில் கூடுதல் தொகை அச்சிடப்பட்டிருந்ததை கேட்டதற்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நாரணாபுரத்தில் வசித்து வருபவர் ராஜ்குமார்(37).விசைத்தறி உரிமையாளரான இவர், மகாலட்சுமி நகருக்கு அருகே செயல்பட்டு வரும் பணானா லீஃப் ரெஸ்டாரண்டிற்கு தனது குழந்தையுடன் சென்றுள்ளார்.

பின்னர் தனது குழந்தைக்கு சிக்கன் ரைஸ், மஞ்சூரியன் மற்றும் பெப்சி ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளார். அவர் செய்த ஆர்டருக்குரிய பில்லை சப்ளையர் ராஜ்குமாரிடம் கொடுத்துள்ளார். பில்லை பார்த்த ராஜ்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.



பெப்சியின் எம்.ஆர்.பி விலை ரூ.40 என பாட்டிலில் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் ரூ.15 அதிகமாக பில்லில் போடப்பட்டிருப்பதற்கு விளக்கம் கேட்டதற்கு முறையாக பதில் அளிக்காமல் சப்ளையர் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பெண் ஊழியர் மற்றும்.அங்கிருந்த ஊழியர்களிடம் ராஜ்குமார் முறையிட்டும் பதில் கூறாமல் அடியாட்களை கொண்டு மிரட்டியதோடு முழுத்தொகையையும் வாங்கி கொண்டு ரெஸ்டாரண்டில் இருந்து வெளியேற்றினர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடையே பேசிய ராஜ்குமார் கூறியதாவது, அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை பொருட்களை செய்யும் பணானா லீஃப் ரெஸ்ட்டாரண்ட் மீது நடவடிக்கை எடுக்க கோரி உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கப்போவதாக தெரிவித்தார்.

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் வாங்கிய விவகாரத்தில் சர்ச்சை முடிவதற்குள் கூல்டிரிங்ஸ் பாட்டிலுக்கு மேல் ரூ. 15 அதிகம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...