ஆனைமலை அருகே பிடிபட்ட மக்னா யானை - சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்டது!

வால்பாறை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட சரளபதி பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், அதனை சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடுவித்தனர்.



கோவை: கோவை சரளபதி பகுதியில் மக்னா யானையை பிடித்த வனத்துறையினர், அதனை சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடுவித்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மானாம்பள்ளி வனப்பகுதியில் மந்திரி மட்டம் என்ற இடத்தில் யானையை விடுவித்தனர்,

யானை சில மாதங்களாக வனப்பகுதியில் சுற்றி திரிந்து மீண்டும் சமவெளி பகுதியான ஆனைமலை, சேத்துமடை, சர்க்கார்பதி, போன்ற இடங்களுக்கு சென்று விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது, இந்த யானையை பிடித்து கும்கி யானையாக மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.



இந்நிலையில் நேற்று காலை சரளபதி என்ற பகுதியில் யானையை வனத்துறையினர் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.



மக்னா யானையை கும்கி யானை உதவியுடன் லாரி மூலம் ஏற்றப்பட்டது.



தொடர்ந்து, வால்பாறை பகுதியில் உள்ள சின்னக்கல்லார் வன பகுதியில் விடுவதற்கு கொண்டு வந்து பொதுமக்கள் வாழும் குடியிருப்பு அருகில் பேருந்து நிலையம் அருகில் லாரியில் இருந்து இறக்கி வன பகுதிக்குள் விரட்டினர்.

குடியிருப்புக்கு அருகில் விடுவிக்கப்பட்டுள்ளதால் யானை மீண்டும் குடியிருப்புக்குள் வரலாம் என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...