புஷ்பா பட பாணியில் சந்தன மரம் கடத்தல் - விரட்டி சென்று லாரியை பிடித்த அதிகாரிகள்!

கேரளாவில் இருந்து தமிழ்நாடு வழியாக ஆந்திராவுக்கு புஷ்பா பட பாணியில் சந்தன மரங்களை கடத்தி சென்ற கர்நாடகா பதிவெண் கொண்ட லாரியை, தமிழக போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்து, ஒரு கோடி மதிப்பிலான ஒரு டன் சந்தன மரங்களை பறிமுதல் செய்தனர்.



கோவை: புஷ்பா பட பாணியில் சந்தன மரங்களை கடத்திச் சென்ற லாரியை போலீசார் மடக்கி பிடித்து ஒரு டன் சந்தன மரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். கோவையில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படுவதனால் அதற்காக தனிப்படை போலீசாரும் சந்தன கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளா மாநிலம் மலப்புரத்தில் இருந்து வந்த லாரியை தணிக்கை செய்ய முற்பட்டபோது லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதை தொடர்ந்து அந்த லாரியை பின் தொடர்ந்து விரட்டிச் சென்று பிடிக்க திட்டமிட்டனர். அதற்குள் லாரி வெகு தூரம் பயணித்தது.

பிறகு போலிசார் மடக்கிப் பிடிக்க திட்டமிட்டனர். லாரியின் ரிஜிஸ்ட்ரேசன் எண் தெரியாத நிலையில், வாகனத்தின் அடையாளத்தை நினைவில் வைத்து விரட்டி சென்று ஆத்தூரில் பிடித்தனர். லாரி ஓட்டுநர் மனோஜிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.



விசாரணையில் தூக்க கலக்கத்தில் இருந்ததால் நீங்கள் லாரியை நிறுத்தியது தெரியவில்லை என்றும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். அந்த லாரியில் மரத்தூள் கட்டைகள் இருப்பதாக கூறி உள்ளார்.

சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அந்த லாரியில் சோதனை செய்தனர்.



அதில் ரகசிய அறை அமைத்து சந்தன கட்டைகள் மறைத்து வைத்து கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து வனத் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.



அங்கு வந்து லாரியை பறிமுதல் செய்த வனத்துறையினர், வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் கொண்டு சென்று சோதனை செய்ததில், ஒரு டன் சந்தன மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.



50க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 1051 கிலோ சந்தன மரங்கள் பதுக்கப்பட்டிருந்தது. இதன் சந்தை மதிப்பு ஒரு கோடி என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...