கோவையில் அறப்போர் இயக்கம் சார்பில் இலவச தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி!

கோவையில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி நடைபெறவுள்ள நிலையில் இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் https://forms.gle/9WvEY865vjgByzDR7 என்ற இணைய பக்கத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.



கோவை: கோவையில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் நடைபெறவுள்ள தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் அறப்போர் இயக்கத்தின் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ள https://forms.gle/9WvEY865vjgByzDR7 என்ற இணைய பக்கத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அறப்போர் இயக்கத்தின் கோவை whatsapp குழுவில் இணைய https://chat.whatsapp.com/G37DrFLccDoBvMjM89KfUJ என்ற லிங்க்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் என்ன கற்றுக் கொள்ளலாம் என்பது பின்வருமாறு...

தகவல் பெறும் உரிமை சட்டம் என்றால் என்ன? என்பது குறித்தும், எந்தெந்த தகவலை நாம் இந்த சட்டம் மூலம் பெற முடியும்?. எந்தெந்த தகவலை நாம் இந்த சட்டம் மூலம் பெற முடியாது?. தகவல் கேட்கும் முறை என்ன? யாரிடம் கேட்க வேண்டும்? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

மேலும், கட்டணத்தை செலுத்தும் முறை என்ன?. விண்ணப்பத்தை எப்படி அனுப்ப வேண்டும்?. தகவல்கள் எந்த காரணத்திற்காக கேட்கப்படுகிறது என்று குறிப்பிட வேண்டுமா?. தகவல் எத்தனை நாட்களுக்குள் தரப்பட வேண்டும். தராவிட்டால் என்ன வேண்டும்?.

முதல் மேல் முறையீட்டிலும் பதில் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?. இரண்டாவது மேல்முறையீடு யாரிடம் செய்ய வேண்டும்?. இரண்டாவது மேல்முறையீடு செய்த பின் என்ன செய்ய வேண்டும்? என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...